நால்வகைச் சொற்கள் (இலக்கிய வகை)

Dinesh.B.Sc
By -
0

 


நால்வகைச் சொற்கள் (இலக்கிய வகை)

v  இலக்கிய வகையில் சொல் நான்கு வகைப்படும்.

v  இவை செய்யுள்களிலும், இலக்கியங்களிலும் பயன்படுத்தப்படும் விதத்தை வைத்து 4 வகையாகப் பிரிக்கப்படுகிறது.

1.     இயற்சொல்

2.    திரிச்சொல்

3.    திசைச்சொல்

4.    வடச்சொல்

1.    இயற்சொல்

v  எல்லாருக்கும் பொருள் விளங்கும் வகையில் அமைந்த தமிழ்ச்சொற்கள்

பெயர் இயற்சொற்கள்

வினை இயற்சொற்கள்

காற்று, நிலவு, ஞாயிறு, பலகை

வந்தான், படித்தான், கற்றான்

v  எ.கா :

 

 

2.   திரிச்சொல்

v  கற்றவர்களுக்கு மட்டுமே பொருள் விளங்கக் கூடிய வகையில் அமைந்த சொற்கள்.

v  எ.கா : பீலீ - மயில்தோகை, உகிர் - நகம், ஆழி கடல், எயிறு - பல், வேய் - மூங்கில்மடி- சோம்பல், நல்குரவு - வறுமை, மேதி - எருமை à பெயர் திரிச்சொற்கள்

  வினவினான் - கேட்டான், முடுக்கினான் – செலுத்தினான்விளித்தான் - அழைத்தான், நோக்கினார் - பார்த்தார் à வினை திரிச்சொற்கள்

3.   திசைச்சொல்

v  தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ள பிற்பகுதிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்கள். 

v  எ.கா: கேணி - கிணறு, பெற்றம் - பசு

4.   வடச்சொல்

v  வடமொழிச் சொற்கள் (சமஸ்கிருதம்) திரிந்தும் திரியாமலும் தமிழில் வந்து வழங்குவதை வடச்சொல் என்பர்.

v  எ.கா : கமலம் – தாமரை, விஷம் (விடம்) – நஞ்சு, புஷ்பம் (புட்பம்) – மலர்

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!